பொன்னியின் செல்வன் 2 – எப்படி இருக்கு...? - முதல் விமர்சனம்
நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை
பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 5 மற்றும் 6 மணிக்கு முக்கிய மையங்களில் முதல் காட்சிகள் துவங்கின. அமெரிக்காவில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கியது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் டுவிடரில் வந்துள்ளது.
'பொன்னியின் செல்வன்-2 ' படத்தின் முதல் காட்சியை இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
முதல் பாகத்தைப் போலவே மணிரத்னம் 2ம் பாகத்திலும் அவசரப்படாமல் கதை சொல்லியிருக்கிறார். கல்கியின் கண்ணோட்டத்திற்கு நீதி வழங்க மணிரத்னத்தின் நேர்மையான முயற்சியை படத்தில் காணலாம். என சிகே
விமர்சகர் சி.கே.விமர்சனம் கூறுகையில், படத்தின் முதல் 15 நிமிடங்கள் பிரமாதம். படத்தின் ஹைலைட் நந்தினி-கரிகாலன் மோதல் தான் . விக்ரம் சிறப்பாக செய்து உள்ளார். கார்த்தியும் ஐஸ்வர்யா ராயும் சிறப்பாக நடித்து உள்ளனர்.. ஜெயம் ரவி சிறப்பாக செய்து உள்ளார். இசை நன்றாக உள்ளது. சிறந்த கலை இயக்கம். மெதுவான திரைக்கதை . சிலிர்ப்பான தருணங்கள் இல்லாவிட்டாலும், பார்க்கத் தூண்டும் திரைப்படம். ஒரு நேர்த்தியான வரலாற்று டிராமா என்கிறார் சிகே
.