நடிகர் சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ...! இல்லை என்றால் எச்சரித்த பிரபல தாதா...!
மான் வேட்டையாடியதுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் என நடிகர் சல்மான் கானை பிரபல பிரபல தாதா எச்சரித்து உள்ளார்.
மும்பை
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, பஞ்சாப்பின் மன்சா மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோயை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனா்.
சித்து மூஸ் வாலா கொலை விசாரணையின் போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தானும் தனது சமூகமும் மன்னிக்க மாட்டோம். மான் வேட்டையாடப்பட்ட வழக்கில் தண்டனை குறித்து நான் தான் தீர்மானிப்பேன் வேறு எந்த நீதிமன்றமும் அல்ல என்று பிஷ்னோய் எச்சரித்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
லாரன்ஸ் பிஷ்னோய், விசாரணையின் போது, லாரன்ஸ் பிஷ்னோய், மான்கள் தங்கள் மத குருவான ஜம்பாஜி என்று அழைக்கப்படும் பகவான் ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதுவதால், லாரன்ஸ் பிஷ்னோய் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நீதிமன்றத்தின் விடுதலையோ அல்லது தண்டனையோ அவருக்கு கடைசித் தீர்ப்பாக இருக்காது. சல்மானும் அவரது தந்தை சலீம் கானும் ஜாம்பாஜி கோவிலில் தனது சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் அல்லது அவர்களைக் கொலை செய்தால் மட்டுமே தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வேன் என்று கூறியதாக அந்த அதிகாரி கூறினார்.
1998 ஆம் ஆண்டு ஜோத்பூருக்கு அருகில் உள்ள மத்தானியாவில் உள்ள பவாத் என்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கில், பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.