ரஜினிகாந்த் படத்துக்கு சிறப்பு காட்சி இல்லை ரசிகர்கள் ஏமாற்றம்


ரஜினிகாந்த் படத்துக்கு சிறப்பு காட்சி இல்லை ரசிகர்கள் ஏமாற்றம்
x

ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. அமெரிக்காவில் இப்போதே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விட்டன.

தமிழ்நாட்டில் 1,152 திரைகள் இருப்பதாகவும், அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆர்வமாக இருக்கிறோம் என்றும், இதற்கு ரஜினிகாந்த் ஆவன செய்ய வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 6 மணிக்கு சிறப்பு காட்சியாக ஜெயிலர் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிறப்பு காட்சி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே விஜய்யின் வாரிசு, அஜித்குமாரின் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Next Story