பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்- திரை உலகினர் இரங்கல்
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'அபூர்வ சகோதரர்கள்', 'அன்பே சிவம்', 'கார்கி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. 1981ஆம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படம் மூலம் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.சிவாஜி மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story