ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்... நடிகர் பாலாவின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி..!


ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்... நடிகர் பாலாவின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி..!
x
தினத்தந்தி 2 Jan 2024 6:51 PM IST (Updated: 2 Jan 2024 6:59 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தருமாறு பாலாவிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்

செங்கல்பட்டு,

சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறாா். அவர் தன்னுடைய சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார்.

அவர் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த கிராமத்தில் குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருவதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தருமாறு பாலாவிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் இணைந்து ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் அதனை மக்கள் பயன்பாட்டிற்காக இருவரும் நேற்று திறந்து வைத்தனர். மனு கொடுத்த 10 நாளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்த இருவருக்கும் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story