தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பதக்கம் மட்டுமின்றி ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
சென்னை,
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்வானவர்கள் இந்திய ஜனாதிபதியால் கவுரவிக்கப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம் மட்டுமின்றி ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
ஸ்வர்ண கமல் அல்லது கோல்டன் லோட்டஸ் வெற்றியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும், ரஜத் கமல் வெற்றியாளர்களுக்கு ரூ. 2 லட்சமும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும்.
ஸ்வர்ண கமல் வகை விருதுகளின் கீழ் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு பெறும் வெற்றியாளர்களில் சிலர் இதோ:
1. சிறந்த திரைப்படம்: 'ஆட்டம்' இயக்குனர் ஆனந்த் ஏகர்ஷி
2. இயக்குனரின் சிறந்த அறிமுகப் படம்: 'பௌஜா' இயக்குனர் பிரமோத் குமார்
3. சிறந்த பிரபலமான திரைப்படம்: 'காந்தாரா' இயக்குனர் ரிஷப் ஷெட்டி
4. சிறந்த இயக்கம்: 'உஞ்சாய்' படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா
ரஜத் கமல் விருதுகளின் கீழ் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு பெறும் வெற்றியாளர்களின் பட்டியல் இதோ:
1. முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி
2. முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகை: நித்யா மேனன், மானசி பரேக்
3. சிறந்த துணை நடிகர்: பவன் ராஜ் மல்ஹோத்ரா
4. சிறந்த துணை நடிகை: நீனா குப்தா
5. சிறந்த குழந்தை கதாபாத்திரம்: ஸ்ரீபத்
6. சிறந்த ஆண் பின்னணி பாடகர்: அரிஜித் சிங்
7. சிறந்த பெண் பின்னணிப் பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ
8. சிறந்த ஒளிப்பதிவு: ரவிவர்மன்
9. சிறந்த இசை இயக்கம்: பிரீதம், ஏ.ஆர்.ரகுமான்