டைரக்டர்- நடிகர் பிரதாப் போத்தன் காலமானார் -திரையுலக பிரபலங்கள் இரங்கல் - நேரில் அஞ்சலி


டைரக்டர்- நடிகர் பிரதாப் போத்தன் காலமானார் -திரையுலக பிரபலங்கள் இரங்கல் - நேரில் அஞ்சலி
x

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரதாப் போத்தன் 1952ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் படிப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். மும்பை விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராக தனது வாழ்வை தொடங்கிய அவர், 1978ம் ஆண்டு மலையாள திரை உலகில் பரதனின் ஆரவம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அழியாத கோலங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரதாப் போத்தனின் வாழ்வில் அது முதல் திருப்புமுனையாக அமைகிறது. அழியாத கோலங்களுக்கு பிரதாப் போத்தனை அழைத்து வந்த பாலு மகேந்திரா, மூடு பனியின் மூலம் பிரதாப் போத்தன் எனும் கலைஞனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் மன பிறழ்வு கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து தமிழ் திரை வரலாற்றில் அழுத்தமான காலடி தடங்களை பதித்தார். வறுமையின் நிறம் சிகப்பு, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் என காலத்தால் அழியாத படங்களில் பங்களிப்பை அளித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்துள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தாம் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைடியர் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா,சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். இவ்வாறு நடிப்பு, இயக்கம் என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர்.

இயக்குநர் பணியை நிறுத்திய அவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக மம்முட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்தில் நடித்திருந்தார். 40 ஆண்டுகளாக திரை உலகின் ஒரு அங்கமாக திகழ்ந்த பிரதாப் போத்தன் தனது 69வது வயதில் காலமானார்.

உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு டைரக்டர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம் மற்றும் ராஜூ மேனன், கமல்ஹாசன், ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

"ரொம்ப சந்தோஷமான ஒரு நபர்... அவர கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்" ... நடிகர் பிரதாப் போத்தன் மரணம் குறித்து மணிரத்னம் உருக்கமாக கூறினார்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதாப் போத்தன் 70 மற்றும் 80 காலகட்டங்களில் மிகச்சிறந்து விளங்கினார்.

சிறந்த எழுத்தாளர், நடிகர், இயக்குனர் அவரின் மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அவரை நேசிக்கும் அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாதவர், எளிமையானவர், கர்வம் இல்லாத மனிதர் என புகழாரம் சூட்டினார். அத்துடன் புதியவர்களுக்கு உதவி செய்பவர் எனவும் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவில், "தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சத்யராஜ் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், "ஆரூயிர் நண்பன், மிக சிறந்த இயக்குநர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் ஜீவா, மகுடம் ஆகிய இரு படங்களில் நடித்ததால் நல்ல பெயர் கிடைத்தது. குழந்தை போல மனசு, அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது, எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பார். ஆனால் திடீரென அவர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.




Next Story