இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு


இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு
x

image courtecy: twitter@dhanushkraja

தினத்தந்தி 20 March 2024 3:08 PM IST (Updated: 21 March 2024 5:43 PM IST)
t-max-icont-min-icon

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது.

சென்னை,

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா.இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

இவரது 1,000-வது படம் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை. இவர் 2010 ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது.

இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது. ராக்கி, சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படங்கள் ஆகும்.

முன்னதாக இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story