சர்ச்சை கதையம்ச படம்... 16 காட்சிகளை நீக்கிய தணிக்கை குழு


சர்ச்சை கதையம்ச படம்... 16 காட்சிகளை நீக்கிய தணிக்கை குழு
x
தினத்தந்தி 29 Sept 2023 9:05 AM IST (Updated: 29 Sept 2023 10:36 AM IST)
t-max-icont-min-icon

"இந்த கிரைம் தப்பில்ல" என்ற படத்தில் தணிக்கை குழுவினர் 16 சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

பாலியல் குற்றவாளிகளை சட்டத்துக்கு புறம்பாக தண்டிக்கும் கதையம்சத்தில் உருவாகி உள்ள "இந்த கிரைம் தப்பில்ல" என்ற படம் தணிக்கை குழுவின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசியல் செல்வாக்குள்ள சிலர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். அவர்களை நாயகனும் நாயகியும் போராளியாக வரும் நரேனுடன் இணைந்து சட்டத்துக்கு புறம்பாக எப்படி தண்டிக்கின்றனர் என்பது கதை.

இதில் நாயகனாக பாண்டி கமல், நாயகியாக மேக்னா எலன் நடித்துள்ளனர். ஆடுகளம் நரேன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவகுமார் டைரக்டு செய்துள்ள இந்த படத்தை மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார்.

படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து யூ சான்றிதழ் அளிக்க மறுத்தனர். பின்னர் வசனம் உள்ளிட்ட 16 சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். நீதி தேவதை கையில் அரிவாள் வைத்திருப்பது போன்ற போஸ்டரை வெளியிடவும் அனுமதி மறுத்தனர்.


Next Story