சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
x
தினத்தந்தி 25 Sept 2023 3:02 PM IST (Updated: 25 Sept 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: 'தனக்கு போதுமான வசதி வந்துவிட்டதால் இனி தனது டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்' என ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறாரே... (செல்வா, விழுப்புரம்)

பதில்: இப்படிச் சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டுமல்லவா!

கேள்வி: எங்கள் தானைத் தலைவி மியா கலிபா மீண்டும் எங்களை 'முன்புபோல' மகிழ்விக்க வரமாட்டாரா? (கதிரேசன், பழைய பெருங்களத்தூர்)

பதில்: வாய்ப்பில்லை ராஜா. வேண்டுமென்றால் அவரது முந்தைய காவியங்களைப் பார்த்து ஏக்கத்தை தணியுங்களேன்!

கேள்வி: 'மைக்' மோகன் சொந்தக்குரலில் பேசி நடித்த முதல் படம் எது? (கண்ணாத்தாள், நாட்டரசன்கோட்டை)

பதில்: பாசப் பறவைகள் (1988)!

கேள்வி: நடிகை பானுமதியை 'அஷ்டாவதானி' என்று சொல்லக் காரணம் என்னவோ? (உலகநாதன், ஆண்டிப்பட்டி)

பதில்: எழுத்து, ஓவியம், நடிப்பு, பாடல்கள் பாடுவது, படங்கள் தயாரிப்பது, இயக்குவது என பல துறைகளில் கொடி கட்டிப் பறந்ததால், பானுமதியை 'அஷ்டாவதானி' என தென்னிந்திய சினிமா புகழ்ந்தது!

கேள்வி: பாக்யராஜின் மகன் சாந்தனு என்ன செய்கிறார்? (பால் சிவசங்கர், விருதுநகர்)

பதில்: 'குண்டூர் காரம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

கேள்வி: 'ஜெயிலர்' பட வெற்றிக்காக ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கார்கள் பரிசளிக்கப்பட்டு உள்ளதே? (டி.மாலினி, வியாசர்பாடி, சென்னை)

பதில்: படம் 'ஹிட்'டாக உழைத்தவர்களுக்கு காரை 'கிப்ட்' ஆக கொடுத்ததில் தவறில்லையே..!

கேள்வி: வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் தன்னுடன் 'செல்பி' எடுக்க ஒரு நிபந்தனை போட்டுள்ளாராமே... அது என்ன? (கார்முகில், ராஜபாளையம்)

பதில்: 10 முதல் 20 தண்டால் போட்டால் 'செல்பி' எடுக்கலாம். உடற்பயிற்சியின் அவசியத்தை ஊக்குவிக்கும் முயற்சியாம் இது!

கேள்வி: குருவியாரே... நடிகைகள் தங்களது ஓய்வு நேரங்களில் என்ன செய்வார்கள்? (எஸ்.மாரிமுத்து, காரைக்கால்)

பதில்: கொஞ்சம் 'பிரீயாக' இருப்பார்கள்!

கேள்வி: இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் சொந்தக் குரலில் பாடியுள்ளாரா? (செண்பகம் கனி, தேனி)

பதில்: 'மதனமோகினி' படத்தில், பாடகி லீலாவுடன் இணைந்து பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே பாடல் அதுதான்!

கேள்வி: தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் யோகிபாபுவுக்கு இனி போட்டி என்றால் யாராக இருக்கும்? (முத்துராமன், தஞ்சை)

பதில்: கிங்ஸ்லி பெயர் அடிபடுகிறது!

கேள்வி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கலைத்திறமைக்கு ஏதாவது ஒரு எடுத்துக்காட்டு கூற முடியுமா? (தேவிபிரியா, மன்னார்குடி)

பதில்: 'கடிபிடி கண்டா' என்ற கன்னட படத்தில் 'நீனு நீனே இல்லி நானு நானே...' என்ற பாடலில் இரு கதாபாத்திரங்களுக்கு இருவேறு குரல்களில் எஸ்.பி.பி.யே பாடி அசத்தி இருப்பார். விருதுகளை குவித்த இந்த பாடலே மிகப்பெரிய சான்று!

கேள்வி: பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படம் வெளியாக தாமதம் ஏன்? (உலகநாயகி, தேவிபட்டினம்)

பதில்: 'படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் மாற்றங்கள் செய்து வருவதாலேயே தாமதம்' என்கிறார், இயக்குனர் தியாகராஜன்.

கேள்வி: 'மத்தகம்' வெப் தொடரில் கவுன்சிலர் கதாபாத்திரத்தில் நடித்தவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே? (ஈ.அருணாசலம், காந்திபுரம், கோவை)

பதில்: அஜித்குமார் நடிப்பில் வெளியான 'ராசி' படத்தை இயக்கிய முரளி அப்பாஸ் தான். இனி அவரை பல படங்களில் பார்க்கலாம்!

கேள்வி: நடிகர் அதர்வா ஆளையே காணோமே... பார்த்தீரா குருவியாரே... (எஸ்.ஏ.அஞ்சனா, ஜெய்ஹிந்த்புரம், மதுரை)

பதில்: 'அட்ரஸ்', 'தனல்', 'நிறங்கள் மூன்று' என அடுத்தடுத்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். 3 படங்களும் வெளிவர தயாராக இருக்கின்றன!

கேள்வி: குடும்ப குத்துவிளக்காக இருந்த மடோனா செபஸ்டின் தற்போது கொஞ்சம் தாராளம் காட்டுகிறாரே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: 4-ம் எட்டில் உள்ள அவர், 'முதிர்ச்சி'யை மறைக்க கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்!


Next Story