சினிமா கேள்வி-பதில்கள் : குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள் : குருவியார்
x

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: குருவியாரே... கரகாட்டக்காரி வேடத்தில் நடிகை ஆஷ்னா சவேரியை பார்க்க விரும்புகிறேன்... என் ஆசை நடக்குமா? (டி.ராதாகிருஷ்ணன், நெல்லை)

பதில்: வாய்ப்பு இருக்கிறது. ரூபாய் நோட்டு மாலையுடன் அருகில் செல்லுங்கள்!

கேள்வி: 'நடிகர்கள் போல நடிகைகளும் உழைக்கிறார்கள். ஆனால் சம்பளத்தில் மட்டும் வேறுபாடு இருக்கிறது', என்று ரகுல் பிரீத் சிங் கொதித்துள்ளாரே... (கார்த்திகேயன், வாணியம்பாடி)

பதில்: நியாயம்தானே... 'உழைத்த காசு' வீண் போகக்கூடாது அல்லவா!

கேள்வி: பறவைகள்-விலங்குகளுக்காக ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறாரே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: கசப்பான அனுபவம் தந்த பாடத்தினால் மனிதர்களை விட பிராணிகளை நம்ப தொடங்கிவிட்டாராம்!

கேள்வி: தமன்னாவின் வயிறு ஒட்டிப் போயிருக்கிறதே... சாப்பிடவே மாட்டாரா? (டி.வேல்முருகன், குமணன்சாவடி)

பதில்: 'பிசி'யான நடிகைக்கு 'பசி' தெரியாது!

கேள்வி: தெலுங்கு நடிகைகளின் உதடு மிகவும் சிவந்து போய் இருக்கிறதே? என்ன காரணம்? (கோவிந்தராஜ், பூதகுடி)

பதில்: சிவப்பு மிளகாய் தான். காரசாரமான ஆந்திரா சாப்பாடு தான் காரணமாம்!

கேள்வி: அந்த உள்ளாடை விளம்பரத்தில் ராஷ்மிகா நடித்தது சர்ச்சையாக பேசப்படுகிறதே? (உலகநாயகி, தேவிபட்டினம்)

பதில்: அதில், 'காம நெடி' வீசியதால் வந்தது வினை!

கேள்வி: கீர்த்தி ஷெட்டியை நினைக்கும் போதெல்லாம் இரட்டை நிலவு என் கண்முன் வந்து செல்கிறதே, அது ஏன்? (கோ.பாலு, புரசைவாக்கம், சென்னை)

பதில்: வாலிப கோளாறில் எல்லாமே வரும்..!

கேள்வி: 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் விசுவின் இளைய மகனாக நடித்த காஜா ஷெரீப் என்ன செய்கிறார்? (ஜெ.மணிகண்டன், ஆம்பூர்)

பதில்: பெரியளவில் பிரபலமாகாத நகைச்சுவை நடிகர்களை ஒன்றிணைத்து 'நட்சத்திர திருவிழா' என்ற பெயரில் கிராம கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்!

கேள்வி: விஜய் தேவரகொண்டாவுடன், சமந்தா மிகவும் நெருக்கம் காட்டுவது ஏன்... (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)

பதில்: எல்லாம் ஒரு அக்கறையில் தான்!

கேள்வி: மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த 'சாமானியன்' படம் எப்போது திரைக்கு வரும்? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது!

கேள்வி: அமீர்கானுக்கு என்ன ஆனது? ஏன் அவர் படங்கள் நடிக்கவில்லை? (உமா கண்ணன், சேலம்)

பதில்: குடும்ப பிரச்சினைகளால் குழப்பத்தில் இருக்கிறார். விரைவில் மீண்டு(ம்) வருவார்!

கேள்வி: 'கடலோர கவிதைகள்' படத்தில் ஜெனிபர் டீச்சராக நடித்த ரேகா மீண்டும் நடிப்பாரா? ( முகமது முளீர்,வந்தவாசி)

பதில்: அந்த சமையல் நிகழ்ச்சியில் பேசப்பட்டதன் மூலம் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். வெள்ளித்திரையில் மீண்டும் டீச்சரை விரைவில் காணலாம்!

கேள்வி: சூர்யாவின் புதிய படமான 'கங்குவா'வில் அவருக்கு ஜோடி யார்? (காஜா முகைதீன், ராமநாதபுரம்)

பதில்: இந்தி நடிகை திஷா பதானி!

கேள்வி: 'விடுதலை' படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகிறது? (என்.சாமிநாதன், பட்டீஸ்வரம்)

பதில்: 50 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம்!

கேள்வி: சன்னி லியோனுக்கும், மல்லிகா ஷெராவத்துக்கும் இடையே உள்ள சிறப்பம்சம் என்னவோ... (தங்கவேல், பூலாம்பட்டி)

பதில்: வேற்றுமையில் ஒற்றுமை தான்!

கேள்வி: நடிகை விசித்ரா சின்னத்திரை சமையல் நிகழ்ச்சியில் புதுப்புது 'டிஷ்'கள் செய்து அசத்தி வருகிறாரே... (டி.வடிவேல், கோமதிபுரம், கும்பகோணம்)

பதில்: சமையலில் மட்டுமல்ல, பரிமாறுவதிலும் தான்..!

கேள்வி: பயங்கரமான ஹாலிவுட் பேய் படம் 'தி நன்' 2-ம் பாகம் தயாராகி விட்டதா... (சாய் தமிஷ், விளாங்காடுபாக்கம்)

பதில்: வருகிற செப்டம்பர் 8-ந்தேதி வெளியாகிறது. இது குலை நடுங்க வைக்கும் கதையாம்!

கேள்வி: 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் வரும் 'நலம் தானா...' பாடலுக்கு மனதை உருக்கும் வகையில் நாதஸ்வரம் இசைத்தது யார்? (விஸ்வநாதன், விருதுநகர்)

பதில்: 'எம்.பி.என். சகோதரர்கள்' என்று அழைக்கப்பட்ட சேதுராமன் - பொன்னுசாமி. மதுரையை சேர்ந்தவர்கள்!

கேள்வி: நடிகை அஞ்சலி என்ன செய்கிறார், படங்களில் நடிக்கிறாரா? (ராஜேஷ்கண்ணா, நாகர்கோவில்)

பதில்: 'ஈகை' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது அவரது 50-வது படம்!

கேள்வி: 'சேலை கட்டினால் இப்படித்தான் பார்க்க வேண்டுமா...' என்று ஆண்களை திட்டி வாணிபோஜன் பேசியுள்ளாரே... (ரேவதி, விழுப்புரம்)

பதில்: பாரம்பரிய உடையிலும் கவர்ச்சியை பார்த்தால் இப்படி கோபம் தான் வரும்!

கேள்வி: சின்னப்ப தேவர் போல மிருகங்கள் வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லையே...(வி.எம்.வள்ளிநாயகம், கோவில்தெரு, தென்காசி)

பதில்: நீல கலரில் யாராவது 'கிராஸ்' செய்து விடுவார்களே என்ற பயம் தான்..!

கேள்வி: 'பழைய விஷயங்களை அவ்வப்போது மறக்க முயற்சி செய்கிறேன்' என அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறாரே? (ஜான் அலெக்சாண்டர், மில்லர்புரம், தூத்துக்குடி)

பதில்: 'பழையன கழிதலும்... புதியன புகுதலும்...' அதுதானே வாழ்க்கை!


Next Story