சினிமா கேள்வி-பதில்கள்; குருவியார்
சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: கண்ணழகி பானுப்பிரியா எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்? (எம்.ஏ.மூர்த்தி, புதுக்கோட்டை)
பதில்: கடந்த 37 ஆண்டுகளில் 200-க் கும் மேற்பட்ட படங்களிலும், 12 டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்!
********************
கேள்வி: 'யாத்திசை' படத்தில் 'கொதி' கதாபாத்திரத்தில் நடித்த சேயோன் நடிப்பு எப்படி? (சீ.பி.ஷபீ, சென்னை)
பதில்: அருமையான நடிப்பு. நிறைய பட வாய்ப்புகளை பெறுவார்!
********************
கேள்வி: 'போதும்' என்ற மனநிலை நடிகைகளுக்கு எப்போது வரும்? (வே.தேவஜோதி, தபால்தந்தி நகர், மதுரை)
பதில்: ஒவ்வொரு 'டேக்' முடியும் 'போதும்'..!
********************
கேள்வி: கருத்துகளை துணிச்சலாக சொல்லும் நடிகைகள் யார்? (ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)
பதில்: குஷ்பு, கஸ்தூரி!
********************
கேள்வி: இனிமையான குரல் வளம் கொண்ட பாடகி ஷ்ரேயா கோஷல் எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறார்? (கே.ஆர்.ரவீந்திரன், சென்னை)
பதில்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி உள்பட 15 மொழிகளில் பாடி வருகிறார். 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு!
********************
கேள்வி: ஜெய்சங்கர் 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அழைக்கப்படுவது ஏன்? (ரமாதேவி, தூத்துக்குடி)
பதில்: சி.ஐ.டி., சி.பி.ஐ. என ஆங்கில பட பாணியில் கோட்சூட் அணிந்து துப்புதுலக்கும் அதிகாரியாக பல படங்களில் ஜெய்சங்கர் அமர்க்களப்படுத்தினார். அதனாலேயே 'ஜேம்ஸ்பாண்ட்' பட்டம்!
********************
கேள்வி: ராக்கி சாவந்த் லாட்டரி டிக்கெட் விற்பவராக நடிப்பாரா? (ரவிச் சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: உங்கள் எண்ணம் புரிகிறது. குலுக்கலில் பரிசு விழுகிறதோ இல்லையோ அடி விழும். பரவாயில்லையா..!
********************
கேள்வி: ஆண்டிரியாவின் நடிப்பு, குரல் வளம். எது சிறப்பு? (ஜெ.மணிகண்டன், ஆம்பூர்)
பதில்: நடிப்பில் 'பளபளப்பு'. குரலில் 'கிளுகிளுப்பு'. உங்களுக்கு அவர் மேல் ஒரு 'குறுகுறுப்பு'. சரிதானே..!
********************
கேள்வி: எந்த நடிகையின் தோளில் அமர விரும்புகிறீர்கள், குருவியாரே? (கார்த்திகை தேவி, மடப்புரம்)
பதில்: எல்லா நடிகைகளின் தோளிலும் கூடுகட்டி குடியிருக்க ஆசை தான். ஆனால் என் 'எடை'யை தாங்கும் 'இடை' அழகி யாரோ?
********************
கேள்வி: இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பற்றி... (பார்வதி ராமமாணிக்கம், விழுப்புரம்)
பதில்: இசையில் 50 ஆண்டு காலம் கோலோச்சிய 'திரை இசை திலகம்'!
********************
கேள்வி: 'புதிய பாதை' படத்தின் 2-ம் பாகம் வரப்போகிறதாமே, உண்மையா குருவியாரே... (வி.டி.சரத் குமார், விருதுநகர்)
பதில்: அதை பார்த்திபனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளாரே..!
********************
கேள்வி: தமன்னா, சமந்தா, ராஷ்மிகா ஆகியோரிடம் உள்ள ஒற்றுமை என்ன? (மாணிக்கம், கழுகுமலை)
பதில்: அனைவரது பெயரும் 'ஆ' என்று முடிவதில் தான்..!
********************
கேள்வி: 'ஆபாச படங்களில் இனி நடிக்க மாட்டேன்', என்று சன்னி லியோன் சொல்லிவிட்டாரே, ஏன்? (கனகரத்தினம், ஆம்பூர்)
பதில்: ஆய கலைகளும் கற்றுவிட்டாராம்! அதனால் வேறு பாதைக்கு திரும்ப நினைக்கிறார் போலும்!
********************
கேள்வி: நேபாளத்தில் இந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏன்? (கோதை, ஊட்டி)
பதில்: 'ஆதிபுருஷ்' படத்தில் எழுந்த சர்ச்சையான வசனங்கள் தான் இதற்கு காரணம்!
********************
கேள்வி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முறைப்படி சங்கீதம் கற்றவரா? (டி.ஏழுமலை, வேடந்தாங்கல்)
பதில்: இல்லை. என்றாலும், 'சங்கராபரணம்' படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். கேள்வி ஞானத்திலேயே ஸ்வரங்களை கற்ற கலைஞன் அவர்!
********************
கேள்வி: தெலுங்கு திரையுலகை தாய் வீடு போல உணருகிறேன் என்று கூறும் காஜல் அகர்வால், தமிழ் திரையுலகை எப்படி உணருகிறாராம்? (கலைகோட்டுதயம், திருப்பூர்)
பதில்: மாமியார் வீடாக உணருகிறார் போலும், தலைகாட்டவே தயங்குகிறாரே..!
********************
கேள்வி: இந்தி நடிகை பூஜா பட் மது பழக்கம் உடையவரா? (ரோஜா, ஊட்டி)
பதில்: இப்போது திருந்திவிட்டாராம்!
********************
கேள்வி: குஷ்பு தவிர வேறெந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிஇருக்கிறார்கள்? (தளபதி விக்னேஷ், காஞ்சிபுரம்)
பதில்: நயன்தாரா, நமீதா, நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள். ஹன்சிகாவுக்கு அந்த முயற்சி நடந்தது. ஆனால் முன்கூட்டியே அவர் கேட்டுக்கொண்டதால் கோவில் கட்டும் முயற்சி கைவிடப்பட்டது!
********************
கேள்வி: ஹாலிவுட்டின் கண்ணழகி யார்? (சிங்கப்பூர் மணிகண்டன், திருவள்ளூர்)
பதில்: 'நீல விழி அழகி' அலெக்சாண்ட்ரா டட்டாரியோ. நம்ம ஊர் சில்க் போல, போதை ஏற்றும் கண்கள் அவருக்கு..!
********************
கேள்வி: நடிகை மாதவி என்ன ஆனார், எங்கிருக்கிறார்? (ராஜூ நரசிம்மன், தியாகராயநகர், சென்னை)
பதில்: 80, 90-களில் சினிமாவை கலக்கிய அந்த காந்த கண்ணழகி, திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தொழிலில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம்!
********************
கேள்வி: தான்யா ரவிச்சந்திரனை காதலிக்க விரும்புகிறேன், ஒரு ஐடியா கொடுங்களேன். (மன்மதன், திருச்சி)
பதில்: நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற அவரிடம், 'நாட்டு... நாட்டு...' பாடல் போல தூக்கிய காலை நிறுத்தாமல் ஆடிக் காட்டுங்கள். அது நடந்தால் வாய்ப்பு கிடைக்கும்!
********************
கேள்வி: சமந்தா, அமலாபால், சோனியா அகர்வால் பற்றி... (கலையரசன், திருவண்ணாமலை)
பதில்: திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் 2-வது இன்னிங்சுக்காக காத்திருக்கும் அழகிகள்!