ஓ.டி.டி படங்களுக்கு தணிக்கை அவசியம் - நடிகை கவுதமி
ஓ.டி.டி.யில் வரம்பு மீறிய காட்சிகள், வசனங்கள் இடம் பெறுவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. எனவே ஓ.டி.டி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வரலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
அரசியல், சின்னத்திரை, சினிமா என பிஸியாக இருக்கும் நடிகை கவுதமி தற்போது 'ஸ்டோரி ஆப் திங்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். வெயிங் ஸ்கேல், செல்லுலார், மிரர், கார், கம்ப்ரஸர் என 5 தலைப்புகள் கொண்ட ஆந்தலாஜி படமாக இது தயாராகி உள்ளது. இதில் பரத், லிங்கா, 'அருவி' அதிதி, வினோத் கிஷன், சாந்தனு, 'அர்ச்சனா, சித்திக், ரோஜோ, ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஜார்ஜ் ஆண்டனி இயக்கியுள்ளார்.
வெப் தொடரில் நடிப்பது குறித்து கவுதமி கூறும்போது, "சினிமாவோ, ஓ.டி.டியோ எதுவாக இருந்தாலும் எனது நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன். அந்த வகையில் 'ஸ்டோரி ஆப் திங்ஸ்'சில் எனது கதாபாத்திரம் பேசப்படும். ஓ.டி.டி.யில் வரும் படங்கள் உலகம் முழுவதும் மக்களை எளிதில் சென்றடைகிறது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் படைப்புகளும் நன்றாகவே உள்ளன. ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஓ.டி.டி.யில் வரம்பு மீறிய காட்சிகள், வசனங்கள் இடம் பெறுவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. எனவே ஓ.டி.டி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வரலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என்றார்.