பணத்துக்காக அவர் பின்னாடி போனேனா....! லலித் மோடி பற்றி சுஷ்மிதா சென் ஆவேசம்...!
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
மும்பை
பிரபல இந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில், 'ஷக்கலக்க பேபி' பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ''என் வாழ்வில் சில ஆண்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அதில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்" என்று கூறினார்.
இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில், 58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது.லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லலித் மோடியின் முதல் மனைவி உடல்நலக்குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், 58 வயதான லலித் மோடி தனது புது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதும் இந்த விஷயம் இணையத்தில் டிரெண்ட் ஆனது.
லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்து இருந்தார். இந்த புது காதல் ஜோடிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மற்றொரு புறம் வசவுகளும் இல்லாமல் இல்லை. நெட்டிசன்கள் பலரும் சுஷ்மிதா சென்னை கடுமையாக டிரோல் செய்தனர். குறிப்பாக பணத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில்,
''நான் நானாகவே இருக்கிறேன். எனது மனசாட்சி நடுநிலையானது. இயற்கையானது எப்படி அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைக்கிறதோ? அதைப்போல நானும் அனைத்தையும் விரும்புகிறேன். இத்தகைய சமநிலையை உடைக்கும் போது நாம் எவ்வளவு பிளவுபடுகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
எனக்கு இதுவரை இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராத அறிமுகமானவர்கள் என பலரும் தங்கள் மகத்தான கருத்துக்களையும் எனது கேரக்டர் பற்றி ஆழமான அறிவையும் பகிர்கின்றனர். அனைத்து வழிகளிலும் பணம் சம்பாதிக்கிறேன் என அறிவுஜீவிகள் கூறுகின்றனர். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அதை நானே வாங்கிக்கொள்கிறேன். எனது நலம் விரும்பிகளும், அன்பானவர்களும் முழு மனதுடன் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க நான் விரும்புகிறேன்.
தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் சுஷ் முற்றிலும் நலமாக இருக்கிறார். காரணம் நான் ஒருபோதும் நிச்சயம் அல்லாத இந்த புகழ்வெளிச்சத்தில் வசிப்பவள் அல்ல. நான் சூரியன்.... நான் நானாகவும் எனது மனசாட்சியை மையப்படுத்தியே இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அதுபோல் லலித் மோடி வெளியிட்ட பதிவில், "சமூக வலைத்தளங்களில் ஏன் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரியவில்லை. தெரிந்தால் யாராவது விளக்குங்கள். நான் இன்ஸ்டாவில் சில படங்களை மட்டுமே பதிவிட்டேன். இதற்காக நான் ஏன் விமர்சிக்கப்படுகிறேன்? இப்போது நாங்கள் (சுஷ்மிதா சென்) இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை இருவருக்குமிடையேயான புரிதல் நேர்மறையானதாக இருப்பின் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனால் அதிசயம் நிகழலாம். 'வாழுங்கள் மற்றும் மற்றவரை வாழவிடுங்கள்' இதுதான் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை" எனப்பதிவிட்டு இருந்தார்.