ஆறு மொழிகளில் அசத்தும் ராஷ்மிகா
தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள கன்னட அழகி ராஷ்மிகா மந்தனா நடிப்பு திறமையில் மட்டும் இன்றி ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிலும் வல்லவர். தற்போது ஆறு மொழிகளில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்று இருக்கிறார்.
சமீபத்தில் படப்பிடிப்பு இடைவெளியில் சமூக வலைதளத்தில் கலந்துரையாடிய ராஷ்மிகா ரசிகர்களுக்கு அவரவர்களின் தாய் மொழியிலேயே பதில் அளித்து தனது மொழித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டார்.
தன்னுடைய சொந்த விஷயங்களைகூட ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார். கர்நாடக மாநிலம் கூர்க் நகரில் உள்ள தனது சொந்த வீடு இந்த பூலோகத்திலேயே தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம் என்று தெரிவித்தார்.
"நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தினால் பல மொழிகளையும் கற்றுக்கொண்டேன். மொழி தெரிந்திருந்தால்தான் காட்சிகளில் நடிப்பை தத்ரூபமாக கொண்டுவர முடியும். மொழி புரியாவிட்டால் நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.
ரசிகர்களோடு அவரவர் சொந்த மொழியில் பேசுவதுதான் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்று நான் நினைக்கிறேன்'' என்றும் கூறினார்.