'சாம்ராட் பிருத்விராஜ்' படத்துக்கு ஓமன், குவைத்தில் தடை


சாம்ராட் பிருத்விராஜ் படத்துக்கு ஓமன், குவைத்தில் தடை
x

அக்‌ஷய் குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்திற்க்கு ஓமன், குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். அக்‌ஷய்குமார் தற்போது சாம்ராட் பிருதிவிராஜ் என்ற சரித்திர படத்தில் நடித்து இருக்கிறார். முகமது கோரியிடம் இருந்து நாட்டை காக்க போராடிய இந்திய மன்னன் பிருதிவிராஜ் சவுகானின் வீரத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மனுஷி சில்லார், சஞ்சய்தத், சோனுசூட் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் இன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சாம்ராட் பிருதிவிராஜ் படத்தை குவைத், ஓமன் நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னன் பிருதிவிராஜ் படத்துக்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்', துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'குருப்' மற்றும் விஷ்ணு விஷாலின் 'எப் ஐ ஆர்' படங்கள் குவைத்தில் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story