'தி கோட்' படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்


தி கோட் படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்
x

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படமாக தி கோட் இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறினார்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் 2 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. முன்னாள் பிரபல ஹீரோ மைக் மோகன், கோட் திரைப்படம் மூலம் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இதில் இவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாகவும், சினேகா இன்னொரு விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருக்கின்றனர். நடிகை லைலாவும் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார்.

தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு விஜய், நடுத்தர வயது உடையவராகவும், இன்னொரு விஜய் இளம் வயது நிறைந்த கேரக்டராகவும் இருக்கிறது.

முக்கியமாக இந்த டிரைலரில் வெங்கட் பிரபு, அஜித்தின் டைலாக்கான "இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது..." என்ற மங்காத்தா பட டைலாக்கை பேசியிருக்கிறார் விஜய். வெங்கட் பிரபு, அஜித்தின் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், அவரது டைலாக்கை விஜய்யை வைத்தே பேச வைத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி, கில்லி படத்தில் அவர் பாடிய "மருதமலை மாமனியே முருகைய்யா.." என்ற பாடலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவும் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தி கோட் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத அனுபவம். 'தி கோட்' ஒரு கமர்ஷியல் படம். இதில் நடித்த அனைவருக்கும் சமமான காட்சி இருக்கும். விஜய் சாரின் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ட்ரீட்-ஆக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்.

அஜித் சார்.. கோட் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு டேய் சூப்பரா இருக்கு டா. உனக்கும், விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கிறது. விஜய்க்கும், படக்குழுவுக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிரு டா-னு மெசேஜ் பண்ணாரு.

கோட் பாடல்களுக்கு கலவையான கருத்துகள் வந்திருக்கு. ஆனா நீங்க படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பா எல்லா பாடல்களும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

ஒரு விஷயத்தை எப்படி ஒழுக்கமாக செய்ய வேண்டும் என்பதை விஜய் சாரிடம் கற்றுக்கொண்டேன். 'சூப்பர் ஸ்டார்' லெவலில் இருக்கும் ஒரு நடிகர், மிகவும் எளிமையாக பழகினார். எந்த லெவலில் இருந்தாலும், நம்முடன் பணி செய்பவர்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.


Next Story