அவதார் 2 வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகங்களையும் தயாரிக்க போவதாக ஜேம்ஸ் கேமரூன் உறுதி
அவதார் 2 வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் ஐந்து "அவதார்" பாகங்களையும் தயாரிக்க போவதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
சென்னை
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று வரை உலகளவில் டாப் கன் மேவரிக் மற்றும் பியூரியஸ் 7 ஆகியவற்றின் வாழ்நாள் வசூலை முறியடித்து உள்ளது.
அவதார்: தி வே ஆப் வாட்டர் டிசம்பர் 16, 2022 அன்று வெளியிடப்பட்டது.உலக அளவில் இந்த ப்படம் $1.5 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.இது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடிகளுக்கும் மேல். உலக அளவில் 10-வது பெரிய படமாக மாறியுள்ள அவதார் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சிறப்பான முறையில் வருவாய் ஈட்டி வருகிறது.
தி வே ஆப் வாட்டர் மழுப்பலான $2 பில்லியன் கிளப்பில் சேரும் என கூறப்படுகிறது."அவதார்" மற்றும் "டைட்டானிக்" ($2.2 பில்லியன்) வரலாற்றில் அதிக வசூல் செய்த ஆறு திரைப்படங்களில் மூன்று கேமரூன் படமாகும்.
இந்தியாவில் அவதார் 2 படத்தின் மொத்த வசூல் இப்போது ரூ.354.05 கோடியாக உள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் ஆமிர்கானின் தங்கல் படத்தின் வாழ்நாள் வசூலான ரூ.387.38 கோடியை இப்படம் முறியடிக்க முடியும். இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் மொத்த வசூல் சுமார் 367 கோடி ரூபாயை முறியடிக்கும். இதையடுத்து அவதார் 2 இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக இருக்கும்.
இந்த நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் நிச்சயம் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் உறுதி அளித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் கேமரூன் அவதார் வே ஆப் வாட்டர் லாபகரமானது என்றும் 3 தொடர்ச்சிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதில் இருந்து என்னால் வெளியேற முடியாது மேலும் அடுத்த 6 அல்லது 7 வருடங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும் என கூறி உள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் 5 பாகங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். அவற்றில் இரண்டை முழுமையாக படமாக்கியுள்ளார் (அவதார்:2 தி வே ஆப் வாட்டர்) அவதார் 3, அவதார் 4 படத்தின் சில பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
கேமரூனின் திட்டத்தின் படி நடந்தால், "அவதார் 4" தயாரிப்பை முடித்து, "அவதார் 5" முழுவதுமாக படமாக்கப்படும். அவதார் வரிசையின் அடுத்த படத்தின் தலைப்பு அவதார் 3: தி சீட் பேரர் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று தலைப்புகளில் இது மிகவும் தனித்துவமான தலைப்பு மற்றும் இதைப் பற்றி யாரும் யூகிக்க முடியாது. நான்காவது தி துல்கின் ரைடர் என்றும் ஐந்தாவது தி குவெஸ்ட் பார் எய்வா என்றும் கூறப்படுகிறது.
68 வயதான கேமரூன் தனது வாழ்நாள் முழுவதும் "அவதார்" திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் என்று கூறினாலும் மிகையில்லை.