ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்

Image Credits: Instagram.com/tamannaahspeaks
நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது.
சென்னை,
தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்தார். தற்போது ரஜினிகாந்த் உடன் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலின் மூலம் உலகம் முழுவதும் தமன்னா பிரபலமடைந்தார். முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.
இந்நிலையில் நடிகை தமன்னா சமீபகாலமாக தொடர்ந்து ஆன்மிக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார்
அங்கு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவிலில் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், 'எனது அன்புக்கு உரியவர்களோடு புனிதமான தருணங்கள்' என்று பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.