அஜித் பட நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்


அஜித் பட நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்
x

சென்னை மெட்ரோ பணியால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் 'யாரடி நீ மோகினி', 'கயல்' போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் சைத்ரா. இவர் அஜித்தின் 'வலிமை' படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில்தான் சென்னை மெட்ரோ பணிகளால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், "மெட்ரோ பணிகளில் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து. நேற்றிரவு, எனக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் கிடைத்தது. நள்ளிரவு 1 மணியளவில், நான் எனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தேன் - போரூர் மேம்பாலத்தில். அப்பகுதியில் சோதனை நடப்பதால் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மெதுவாக சென்றன. நான் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மேலே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. ஆபத்தான இந்த விஷயத்தைப் பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டேன். அதிர்ஷ்டவசமாக, நான் காயமடையவில்லை. ஆனால் சிமென்ட் கலவை எனது காரில் ஒட்டிக்கொண்டது. அதை துடைப்பதற்குள் அது கடினமாகிவிட்டது. எனது கார் இப்போது சேதமடைந்துள்ளது. நான் தவறு செய்யவில்லை என்றாலும் என் காரை பழுதுபார்க்க பெரிய செலவு செய்ய இருக்கிறேன்" என்றார்.

மேலும், "நடந்துகொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் அல்லது சாத்தியமான அபாயங்கள் குறித்து ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது தடைகள் எதுவும் இல்லை. எனது இடத்தில் இரு சக்கர வாகனம் அல்லது பாதசாரிகள் இருந்திருந்தால், இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததாரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், நடந்து வரும் கட்டுமானப் பணிகளைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் இந்த பதிவை பகிரவும். எங்கள் சாலையில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு மற்றும் பாதுகாப்பைக் கோருவோம்" என நீண்டப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.


Next Story