மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..'டாக்ஸிக்' பட அப்டேட்!


மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..டாக்ஸிக் பட அப்டேட்!
x

'டாக்ஸிக்’ படத்தில் நடிகர் யாஷ் மீண்டும் டானாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு கர்நாடகா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த படத்தில் நடிகை நயன்தாரா , கியாரா அத்வானி நடிப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் யாஷ், ஸ்டைலிஷான டானாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் யாஷ், கே.ஜி.எப் படங்களில் டானாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story