கொரோனாவுக்கு பின் 'தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது' - நடிகர் நாகார்ஜுன் பேச்சு


கொரோனாவுக்கு பின் தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது - நடிகர் நாகார்ஜுன் பேச்சு
x

நாகார்ஜுன் நடித்த “கோஸ்ட்” என்ற தெலுங்கு படம், ‘ரட்சன் கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரயிருக்கிறது. இந்த படவிழாவில் நாகார்ஜுன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

"நான் பிறந்தது சென்னையில்தான். கல்லூரி வரை படித்ததும் சென்னையில்தான். இங்கே உள்ள ரோடுகளும், பாலங்களும் எனக்கு நன்றாக தெரியும். நான் வாலிப வயதை அடைந்தபோது, என்னை அப்பா (நடிகர் நாகேஸ்வரராவ்) ஐதராபாத்துக்கு அழைத்து சென்றுவிட்டார்.

'கோஸ்ட்' படம் கடந்த வருடமே திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். கொரோனா நோய் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய் விட்டது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது. கொரோனா பொதுமக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள். இது நம் ஒற்றுமையை காட்டுகிறது.

இவ்வாறு நாகார்ஜுன் பேசினார்.


Next Story