தியேட்டரில் தோல்வி முன்கூட்டியே ஓ.டி.டியில் வரும் அமீர்கான் படம்
தியேட்டரில் வெளியாகி தோல்வியை சந்தித்த அமீர்கான் நடித்த லால்சிங் சத்தா படத்தை மட்டும் முன்கூட்டியே ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அமீர்கான் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் தயாரான லால்சிங் சத்தா இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. வசூல் ரூ.100 கோடியை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். நஷ்டத்தை ஈடுகட்ட அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டுக் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளத்தை வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்று கருதி தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. லால்சிங் சத்தா படத்துக்காக அமீர்கான் 4 ஆண்டுகள் உழைப்பை கொடுத்தார். சம்பளமாக ஒரு பைசா கூட பெறவில்லை. லால்சிங் சத்தா படத்தை விரைவில் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. பொதுவாக இந்தி படம் திரைக்கு வந்து 6 மாதங்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தியேட்டரில் வெளியாகி தோல்வியை சந்தித்த லால்சிங் சத்தா படத்தை மட்டும் முன்கூட்டியே ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.