'மகாராஜா' ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர் கான்?


மகாராஜா ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர் கான்?
x

'மகாராஜா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் ஜூலை 12 ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி. வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சனங்களில் காண முடிகிறது.

இந்த நிலையில், மகாராஜா இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவரே நடிக்கப் போகிறாரா அல்லது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்காக வாங்கியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story