நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்..!


நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்..!
x
தினத்தந்தி 20 April 2022 9:51 AM IST (Updated: 20 April 2022 9:51 AM IST)
t-max-icont-min-icon

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன்  நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

 இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு ,சமூக வலைதளங்களில் திரையுலகினர் ,மற்றும் ரசிகர்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

Next Story