ஒரே தேதியில் வெளியான தனது 3 படங்கள் குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி..!


ஒரே தேதியில் வெளியான தனது 3 படங்கள் குறித்து நடிகர்  கார்த்தி நெகிழ்ச்சி..!
x
தினத்தந்தி 3 April 2022 4:49 PM IST (Updated: 3 April 2022 4:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கார்த்தி தற்போது ஒரே தேதியில் வெளியான தனது படங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்  .கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து  பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர்  கார்த்தி தற்போது ஒரே தேதியில் வெளியான   தனது படங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவர் நடிப்பில் வெளியான பையா ,கொம்பன் ,சுல்தான் போன்ற திரைப்படங்கள் ஏப்ரல் 2ல் வெளியான படங்கள் .

இது குறித்து கார்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் வெளிப்படுத்த வித்திட்டது. நான் அறிமுகமாகி 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்துக்கு கொம்பன் திரைப்படம் அழைத்துச் சென்றது. சுல்தான் திரைப்படம் மீண்டும் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என்  நன்றி! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 

Next Story