காதலரை பிரியும் எமி ஜாக்சன்?
தமிழில் மதராச பட்டினம் படத்தில் அறிமுகமான எமிஜாக்சன் முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டம், ஐ, தனுசுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதய நிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0, பிரபுதேவாவுடன் தேவி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவும் காதலித்து நெருங்கி பழகினர். இதில் எமிஜாக்சன் கர்ப்பமானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆனட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார். இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே நடிகைகள் திரிஷா, இலியானா ஆகியோர் இதே போன்று திருமணம் நிச்சயமான பின் புகைப்படங்களை நீக்கி திருமண முறிவை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story