மாரடைப்பால் நடிகர் மரணம்


மாரடைப்பால் நடிகர் மரணம்
x
தினத்தந்தி 4 Dec 2020 3:30 AM IST (Updated: 4 Dec 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா. இவர் குப்த சாஸ்திரம், சங்கராந்தி அல்லுடு, வயசுகோரிகா, பிக்னிக் உள்பட 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ராஜசேகருடன் அங்குசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். தெலுங்கில் 10 படங்கள் தயாரித்து இருக்கிறார். ஐதராபாத் நிஜாம் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த யதா கிருஷ்ணாவுக்கு சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன்இன்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. யதா கிருஷ்ணாவுக்கு ரமாதேவி என்ற மனைவியும் சுரேஷ், லட்சுமண் என்ற மகன்களும் சுஜனா என்ற மகளும் உள்ளனர்.

Next Story