ராகிணி திவேதி கைதால் முடங்கிய 2 படங்கள்
![ராகிணி திவேதி கைதால் முடங்கிய 2 படங்கள் ராகிணி திவேதி கைதால் முடங்கிய 2 படங்கள்](https://img.dailythanthi.com/Articles/2020/Nov/202011110531146482_Rakini-Dwivedi-arrested-2-images-paralyzed_SECVPF.gif)
ராகிணி திவேதி கைது காரணமாக 2 படங்கள் முடங்கியுள்ளது.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த புகாரில் ராகிணி திவேதி கைதாகி 2 மாதங்களாக ஜெயிலில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. ராகிணி திவேதி எப்போது விடுதலை ஆவார் என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் அவர் நடிக்கும் 2 படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
காந்திகிரி என்ற படத்தில் ராகிணி திவேதி நடித்து வந்தார். இதில் பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க இருந்தனர். ஆனால் ராகிணி திவேதி ஜெயிலுக்கு சென்றதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு வேறு நடிகையை வைத்து படமாக்கலாமா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். அப்படி செய்தால் அதிக செலவு பிடிக்கும் என்ற தயக்கமும் உள்ளது. இதுபோல் பிரகாஷ் பெலாவடி இயக்கும் படத்துக்கும் ராகிணி திவேதியை ஒப்பந்தம் செய்து இருந்தனர். அதன் படப்பிடிப்பும் முடங்கி உள்ளது.
Related Tags :
Next Story