டுவிட்டரில் போலி கணக்கு கமல் பட நடிகை போலீசில் புகார்


டுவிட்டரில் போலி கணக்கு கமல் பட நடிகை போலீசில் புகார்
x
தினத்தந்தி 2 Nov 2020 3:30 AM IST (Updated: 1 Nov 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுடனும், சாது படத்தில் அர்ஜுனுடனும் நடித்தவர் ரவீனா தாண்டன்.

இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது யஷ் நடித்து தமிழ், கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. ரவீனா தாண்டன் சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது பெயரில் மர்ம நபர் போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கி அதில் மும்பை போலீசுக்கு எதிரான அவதூறு கருத்துகளை வீடியோவாக வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ரவீனா தாண்டனே இதை பதிவு செய்துள்ளதாக சிலர் தவறாக கருதினர். இது அவரது கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் பெயரில் இயங்கிய போலி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

Next Story