மைக்கேல் ராயப்பன் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா முரளி


மைக்கேல் ராயப்பன் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா முரளி
x
தினத்தந்தி 27 Dec 2019 3:30 AM IST (Updated: 26 Dec 2019 4:48 PM IST)
t-max-icont-min-icon

அதர்வா முரளி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அடுத்து இவர் மேலும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம், இது.

ரவீந்த்ர மாதவா டைரக்டு செய்கிறார். இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர். அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான ‘ஈட்டி’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்து இருந்தார். படத்தை பற்றி டைரக்டர் ரவீந்த்ர மாதவா சொல்கிறார்:-

அதர்வா முரளி ஏற்கனவே ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும், அந்த படத்தின் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. அதிரடி சண்டை காட்சிகளுக்கு அதர்வா முரளி அழகாக பொருந்துகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோடை விடுமுறை விருந்தாக படம் திரைக்கு வரும்.’’

Next Story