படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்
தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை சஜிதா மாடத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மலையாள படங்களில் 20 வருடங்களாக குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். 2013-ல் வெளியான ஷட்டர் படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இந்த நிலையில் தமிழ் படமொன்றில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பதிலாக படுக்கைக்கு வரவேண்டும் என்றும் தன்னை அழைத்ததாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-
“தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கார்த்தி என்ற உதவி இயக்குனர் என்னிடம் போனில் தொடர்புகொண்டு பேசினார். அவர்தான் அந்த படத்தை இயக்கப்போவதாகவும் தெரிவித்தார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறினார். நான் படம் சம்பந்தமான விவரங்களை மெயிலில் அனுப்புங்கள். பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு இந்த இயக்குனர் கொஞ்சம் அனுசரித்து போக வேண்டி இருக்கும் என்றார். நான் அவரை கோபமாக திட்டிவிட்டேன்.
இவ்வாறு சஜிதா கூறியுள்ளார்.
அனுசரித்து செல்ல விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லி அந்த உதவி இயக்குனரின் செல்போன் எண்ணையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story