பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்


பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
x
தினத்தந்தி 6 Jan 2019 11:15 PM (Updated: 6 Jan 2019 10:03 PM)
t-max-icont-min-icon

நடிகை நயன்தாராவின் இன்னொரு திகில் படம் ஒன்று வெளியாக உள்ளது.


நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. இதில் இரண்டு வேடங்களில் வருகிறார். சர்ஜூன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ என்றதும் ‘என்னது மறுபடியுமா’ என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார்.

“என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி இருக்காங்க” “உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல” என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. பெண்சிசு கொலையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. ஒரு நயன்தாராவுக்காக இன்னொரு நயன்தாரா பழிவாங்குவது கதை என்று தெரிகிறது.

நயன்தாரா மேக்கப் போடாமல் கருத்த முகத்தோடு வருகிறார். அவரது விழிகளில் கண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்னொரு நயன்தாரா மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார்.

கருப்பு நயன்தாரா பேய் வேடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இதில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.


Next Story