“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா வற்புறுத்தல்
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை பூர்ணா டுவிட்டரில் அன்பு செழியனை கண்டித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-
“அசோக்குமார் சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் சினிமாவில் இருக்கக்கூடாது.
இந்த உலகத்தை விட்டு அசோக்குமார் சென்றுவிட்டார். அன்பு செழியனுக்கு பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும். இதற்காக நாம் ஒன்றாக கைகோர்த்து செயல்படுவோம்”.
இவ்வாறு பூர்ணா கூறியுள்ளார்.
அன்பு செழியனை விமர்சித்து மோசமான வார்த்தைகளையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது கருத்து பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story