படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம்


படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம்
x
தினத்தந்தி 30 July 2017 11:07 PM (Updated: 30 July 2017 11:07 PM)
t-max-icont-min-icon

பிரபல தெலுங்கு நடிகரான மஞ்சு விஷ்ணு நடிக்கும் அச்சாரி அமெரிக்கா யாத்ரா என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு நடிக்கும் அச்சாரி அமெரிக்கா யாத்ரா என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு காட்சிக்காக கோலாலம்பூர் நகர சாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது போன்று படம் பிடிக்கப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவருடைய மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கியவாறு கீழே விழுந்தது. இதில் மஞ்சு விஷ்ணு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மஞ்சு விஷ்ணு அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஐதராபாத்தில் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story