அமிதாப்பச்சன் ஜோடியாக நடித்தவர்; இந்தி நடிகை சுமிதா சன்யால் மாரடைப்பால் மரணம்
பிரபல இந்தி நடிகை சுமிதா சன்யால் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
சென்னை,
சுமிதா சன்யால் 1960 மற்றும் 70–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 40–க்கும் மேற்பட்ட வங்காள படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் ‘ஆனந்த்’ என்ற படத்தில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் ராஜேஷ் கன்னாவும் நடித்து இருந்தார்.
இந்த படம் 1970–ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ‘ஆசிர்வாத்’ என்ற இந்தி படத்தில் சஞ்சீவ்குமார் ஜோடியாக நடித்துள்ளார். இதுபோல் ஹுட்டி, மேரேசப்னே படங்களிலும் நடித்து இருக்கிறார். ‘கோகபபூர் பிரத்யாபர்தீன்’ என்ற வங்காள மொழி படத்தில் திலீப்குமாரும் சுமிதா சன்யாலும் ஜோடியாக நடித்துள்ளனர்.
சுமிதா சன்யால் சினிமா பட எடிட்டர் சுபோத்ராயை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சுமிதா பன்யாலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தி நடிகர்–நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.