பீட்டாவுக்கு ஆதரவாக நடிகை சன்னி லியோன் மீண்டும் விளம்பரம்


பீட்டாவுக்கு ஆதரவாக நடிகை சன்னி லியோன் மீண்டும் விளம்பரம்
x
தினத்தந்தி 3 Jun 2017 11:06 AM (Updated: 3 Jun 2017 11:06 AM)
t-max-icont-min-icon

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவுக்கு ஆதரவாக சன்னி லியோன் களமிறங்கியுள்ளார்.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டாவுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் மெரினா போராட்டம் வெடித்தது.

மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற்றதுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பீட்டாவுக்கு ஆதரவாக பிரச்சார விளம்பரத்தில் குதித்துள்ளார் சன்னி லியோன். வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய அந்த படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பீட்டாவுக்கு சன்னி லியோன் அளித்துள்ள பேட்டியில், அதிகளவான காய்கறிகளை சாப்பிட்டு வருவதே தன்னுடைய சக்தி காரணம் எனவும், இறைச்சி தொழிலில் விலங்குகள் வதைபடுவதுதான் மோசமான விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.


Next Story