‘விவேகம்’ படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!”


‘விவேகம்’ படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!”
x
தினத்தந்தி 17 May 2017 5:40 PM IST (Updated: 17 May 2017 5:40 PM IST)
t-max-icont-min-icon

‘விவேகம்’ படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!” என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறியிருக்கிறாராம் இயக்குநர் சிவா.


அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் பார்த்தது. இதனால், இவர்கள் கூட்டணியில் 3-வது படமாக விவேகம்  தயாராகி வருகிறது.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் படம் உருவாகிறது.

இது அஜித்குமாருக்கு 57-வது படம் ஆகும். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

அஜித் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்யப்பட்டது இந்த படம் தான் விவேகம். இந்த படத்துக்காக 72 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. இந்த படத்தில் வரும் அஜித்தின் சிக்ஸ் பேக் தோற்றம் கம்பியூட்டர் கிராபிக்ஸ் என்று சிலர் கூறிவரும் நிலையில், அஜித் உண்மையிலேயே உடலை வருத்தி நடித்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே பல்கேரியாவில் காட்சிப்படுத்த வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. சென்னையில் இன்னும் ஒரு சில காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இந்நிலையில், அஜித்தை தவிர ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் ஒருவர் கூட ‘விவேகம்’ படத்தில் இடம்பெறக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா. அதுமட்டுமல்ல, முந்தைய படங்களின் சாயல் துளிகூட இந்தப் படத்தில் இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்துள்ளார்.  ‘விவேகம்’ படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!” என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறியிருக்கிறாராம் இயக்குநர் சிவா.

Next Story