நடிகை அனுபாமா பரமேஸ்வரன் சர்வானந்த் காதல்?


நடிகை அனுபாமா பரமேஸ்வரன் சர்வானந்த் காதல்?
x
தினத்தந்தி 4 Feb 2017 1:14 PM IST (Updated: 4 Feb 2017 1:51 PM IST)
t-max-icont-min-icon

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடிகர் சர்வானந்த் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாக உள்ளது.

பிரேமம் மலையாளப் படம் மூலமாக பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன்.தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். சர்வானந்துடன் இணைந்து அனுபமா நடித்த சதாமனம் வதி என்கிற தெலுங்குப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகக் கூறப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வதும் புகைப்படங்கள் பகிர்வதும் காதலை உறுதிப்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Next Story