‘போகன்’ படத்தில் 2 மாறுபட்ட குணாதிசயங்களுடன் ஜெயம் ரவி-அரவிந்தசாமி


‘போகன்’ படத்தில் 2 மாறுபட்ட குணாதிசயங்களுடன் ஜெயம் ரவி-அரவிந்தசாமி
x
தினத்தந்தி 31 Jan 2017 1:35 PM IST (Updated: 31 Jan 2017 1:35 PM IST)
t-max-icont-min-icon

ரவி-அரவிந்தசாமி ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் லட்சுமன் கூறுகிறார்:-

‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து ஜெயம்

“என் முதல் படமான ‘ரோமியோ ஜூலியட்,’ முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தது. அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில், ‘போகன்’ படத்தை உருவாக்கி இருக்கிறேன். 2 மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட விக்ரம் (ஜெயம் ரவி), விக்ரமாதித்யன் ( அரவிந்தசாமி ) ஆகிய இருவரையும் மையமாக கொண்டுதான் கதை நகரும்.

எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை என பல சிறப்பு அம்சங்களை ‘போகன்’ படம் உள்ளடக்கி இருக்கிறது. நிச்சயமாக ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

கதாநாயகியாக ஹன்சிகா நடித்து இருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபுதேவா ஸ்டூடியோஸ் சார்பில் பிரபுதேவா, கே.கணேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.”

Next Story