ஏ.ஆர்.முருகதாசின் '1947 ஆகஸ்ட் 16' வரலாற்று படம்


ஏ.ஆர்.முருகதாசின் 1947 ஆகஸ்ட் 16 வரலாற்று படம்
x

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்தி நடிக்கும் '1947 ஆகஸ்ட் 16' என்ற படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று பட உலகிலும் 'சூப்பர் ஸ்டார்'களை வைத்து படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்து அவர் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு '1947 ஆகஸ்டு 16' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரேவதி நடிக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஒரு கிராமத்து இளைஞரை பற்றிய கதை, இது. தமிழ்நாட்டின் எழில் மிகுந்த இடங்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றது. என்.எஸ்.பொன்குமார் இயக்குகிறார்.

படத்தை பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ''இது ஒரு நேர்மையான கதை. இதில் இடம்பெறும் சம்பவங்கள் மனதை அசைத்துப் பார்க்கும். படம் பார்ப்பவர்களின் மனதில் நிலைத்து நிற்கும் அழுத்தமான திரைக்கதை. கதாநாயகன் கோபம் கொண்ட இளைஞர், ஆக்ரோஷமானவர். கதாநாயகி ஏங்கும் குணம் கொண்ட அப்பாவி'' என்றார்.


Next Story