நூதன போராட்டம்


நூதன போராட்டம்
x

சுவாமிமலை அருகே ஏரகரம் ஊராட்சி சுடுகாட்டில் பழுதடைந்த கைப்பம்புக்கு மாலை அணிவித்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே ஏரகரம் ஊராட்சி சுடுகாட்டில் பழுதடைந்த கைப்பம்புக்கு மாலை அணிவித்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைப்பம்பு

சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் ஊராட்சி 1-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இத்தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் உடலை அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைப்பது அல்லது எரிப்பது வழக்கம். மேலும் இறுதி காரியங்களை செய்ய தண்ணீர் அவசியம் என்பதால் பல வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கைப்பம்பு அமைக்கப்பட்டது. இந்த பம்பு மூலம் மக்கள் தண்ணீரை எடுத்து இறுதி காரியங்கள் செய்ய பயன்படுத்தி வந்தனர்.

மாலை அணிவித்து போராட்டம்

ஆனால் சுடுகாட்டில் உள்ள இந்த கைப்பம்பு பல வருடங்களாக பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் உடலுக்கு இறுதி காரியங்கள் செய்யும் போது மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகிறார்கள். எனவே ஏரகரம் சுடுகாட்டில் பழுதடைந்துள்ள கைப்பம்பை சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழுதடைந்த கைபம்புக்கு பிணத்துக்கு மாலை அணிவிப்பது போல மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுடுகாட்டுக்கு மின்விளக்குகளும் தண்ணீருக்கான கைப்பம்பும் உடனடியாக அமைத்து தர வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.


Next Story