8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 22 Sep 2024 11:30 AM GMT (Updated: 22 Sep 2024 11:34 AM GMT)

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story