5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பகல் 1 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story