9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு


9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே நிலை கொண்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story