இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story