தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில்  5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 20 Aug 2024 11:46 PM GMT (Updated: 21 Aug 2024 1:28 AM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

'தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால்ப குதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளத,' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story