பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 April 2023 8:22 PM GMT (Updated: 19 April 2023 11:31 PM GMT)

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பார்சிலோனா,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நேரடியாக களம் கண்ட நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் போர்ச்சுகலின் நுனோ போர்ஜெஸ்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேனை வெளியேற்றினார்.

மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), எமில் ரூசுவோரி (பின்லாந்து), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.


Next Story