லைவ் அப்டேட்ஸ் ஈரோடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியானது ...!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
2 March 2023 2:31 AM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை... மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 March 2023 1:05 AM GMT'22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை' - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
25 Feb 2023 11:08 AM GMTமாலை 6 மணியுடன் முடிவடையும் பிரச்சாரம்... ஈரோடு கிழக்கில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சிகள்
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Feb 2023 10:14 AM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.3,000 விநியோகமா? மக்களிடையே ரூ.500 நோட்டுகள் அதிகளவில் புழக்கம் என தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.3000 விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
22 Feb 2023 10:20 AM GMTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக தேர்தல் அதிகரியிடம் மனு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளது.
21 Feb 2023 9:17 AM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!
தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
19 Feb 2023 5:28 AM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த திமுக, அதிமுக அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
16 Feb 2023 8:33 AM GMT"பரோட்டா சுடுறாங்க...வட சுடுறாங்க..".."இப்ப மட்டும் ஏன் வராங்க..." - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
15 Feb 2023 2:03 PM GMTஈரோடு கிழக்கு தொகுதியை வென்றெடுப்போம்- , அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்று முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
12 Feb 2023 3:37 PM GMTஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறினார்.
12 Feb 2023 10:53 AM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 19-ந்தேதி பிரசாரம்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
12 Feb 2023 12:13 AM GMT