பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய குழுவின் தலைவராக ககன் நரங் நியமனம்


பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய குழுவின் தலைவராக ககன் நரங் நியமனம்
x

Image : @Media_SAI

தினத்தந்தி 9 July 2024 2:02 PM GMT (Updated: 16 July 2024 11:51 AM GMT)

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவராக முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவராக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இந்திய குழுவின் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் தன்னால் அந்த பொறுப்பை ஏற்க இயலாது என்று அவர் கூறி விட்டார். இதையடுத்து தற்போது இந்திய ஒலிம்பிக் அணியின் தலைவராக ககன் நரங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை தெரிவித்த இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, 'இந்த முறை நமது வீரர்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மிகச்சிறந்த முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story